கனடாவின் டொரெண்டோவில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு.. ஒரு காவலர் உட்பட இருவர் பலி!

0 1691

கனடாவின் டொரெண்டோவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். நேற்று பிற்பகலில் ஜீப்பில் சுற்றித் திரிந்த ஆயுதமேந்திய மர்ம நபர், மிசிசாகா மற்றும் மில்டன் நகரங்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அங்கு பதற்றம் அதிகரித்தது.

துப்பாக்கிச் சூடு நடத்திய ஷான் பெட்ரி என்ற 30 வயதான இளைஞரை, மாலை 4 மணியளவில் ஹாமில்டன் நகரில் சுற்றி வளைத்த போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments