மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூமில் நள்ளிரவு தீ விபத்து... 8 பேர் உயிரிழப்பு!

0 3033

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் மின்சார மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

ஷோரூமில் பற்றிய தீ கட்டடத்தின் மேல் தளங்களில் செயல்பட்டுவந்த லாட்ஜுக்கும் பரவியதால், ஒரு பெண் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிபத்தில் இருந்து தப்பிக்க சிலர் ஜன்னல் வழியே கீழே குதித்ததாகவும் கூறப்படுகிறது. பலர் தீயணைப்புபடை கிரேன் மூலம் மீட்கப்பட்டனர்.

இதனிடையே, இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments