ஓடும் அரசு பேருந்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சக்கரத்தில் சிக்கி பலி- பதைபதைக்கும் காட்சி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஓடும் அரசு பேருந்திலிருந்து இறங்க முயன்ற மூதாட்டி பேருந்தின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வால்பாறையைச் சேர்ந்த மூதாட்டி அழகம்மாள் சேலத்தில் மகள் வீட்டு விசேஷத்தில் பங்கேற்றுவிட்டு பேரன் பேத்தியுடன் ஊருக்குத் திரும்பியுள்ளார். பல்லடம் பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்து புறப்பட்டபோது, அவசரத்துக்காக மூதாட்டி பேருந்திலிருந்து இறங்க முயன்ற போது கால் இடறி விழுந்த மூதாட்டி மீது பேருந்தில் சிக்கி பலியானார்
பேருந்து ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments