பட்டப்பகலில் கார் ஓட்டுநரை அரிவாளால் தாக்கிய நபர்.. மதுபோதையில் தவறுதலாக மற்றொருவர் மீது தாக்குதல் என தகவல்..!

பட்டப்பகலில் கார் ஓட்டுநரை அரிவாளால் தாக்கிய நபர்.. மதுபோதையில் தவறுதலாக மற்றொருவர் மீது தாக்குதல் என தகவல்..!
சென்னை எண்ணூரில் பட்டப்பகலில் கார் ஓட்டுநர், ஓட ஓட அரிவாளால் தாக்கப்பட்டது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேதாஜி நகர் பகுதியில் நேற்று சவ ஊர்வலம் ஒன்றில் பங்கேற்ற சிலர் மதுபோதையில் அவர்களுக்குள் மோதலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
அப்போது, அந்த கும்பலில் இருந்த ஒருவரை தாக்கும் நோக்கில், கையில் அரிவாளோடு போதையில் இருந்த நபர் விரட்டியுள்ளார்.
குறுகிய தெருக்களுக்குள் நுழைந்து அரிவாளோடு ஓடிய அந்நபர், தவறுதலாக சாலையோரம் நின்ற தங்கராஜ் என்ற கார் ஓட்டுநரை விரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில், தங்கராஜ் படுகாயமடைந்த நிலையில், அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய 7 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Comments