போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட கார்.. 3 கி.மீ. ஓடிச் சென்று நோயாளிக்கு அவசர அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்..!

0 2366

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் ஒருவர், காரை அங்கேயே விட்டு 3 கி.மீ. ஓடிச் சென்று நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்.

பெங்களூரு சர்ஜாபூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றும் கோவிந்த நந்தகுமார் என்னும் மருத்துவர், ஒரு நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி மூலம் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

இதற்காக, மருத்துவமனைக்கு புறப்பட்ட இவர் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். அந்த இடத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல 10 நிமிடங்களே ,ஆகும் என்றாலும், கூகுள் மேப் 45 நிமிடங்களைக் காட்டியுள்ளது.

இதனால், ஓட்டுநரிடம் காரை மருத்துவமனைக்கு எடுத்து வரும்படி சொல்லிவிட்டு, 3 கி.மீ. தூரம் வரை ஓடிச் சென்று நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். தொடர்ந்து செய்த உடற்பயிற்சியினால் தனக்கு இது எளிமையாக இருந்தது என்று கோவிந்த நந்தகுமார் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments