தண்ணீர் பிடிப்பதில் தகராறு.. எதிர்வீட்டில் புகுந்து தாக்குதல்.. அருப்புக்கோட்டையில் அடிதடி..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் எதிர்வீட்டினரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆத்திபட்டியில் ராமசாமி என்பவரின் குடும்பத்தினருக்கும், எதிர்வீட்டில் வசிக்கும் முத்துராமலிங்கம் என்பவரின் குடும்பத்தினருக்கும் பொதுக்குழாயில் யார் முதலில் தண்ணீர் பிடிப்பது என்பது தொடர்பாக பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்றும் இதே விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படும் நிலையில், முத்துராமலிங்கம் உள்ளிட்ட 4 பேர், ராமசாமியின் வீட்டிற்குள் புகுந்து அவரையும், அவரது மனைவி உள்ளிட்டோரையும் தாக்கினர்.
இது குறித்து ராமசாமி அளித்த புகாரின்பேரில் முத்துராமலிங்கம் உட்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
Comments