ஆம்புலன்சை பார்த்து பயந்து மரத்தில் ஏறி அமர்ந்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபர்

0 1690

கேரள மாநிலத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்த ஆம்புலன்சை பார்த்து தென்னை மரத்தில் ஏறி அமர்ந்து கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தீயணைப்புத்துறை வீரர்கள் எட்டரை மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டனர். 

பந்தளம் பகுதியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட  ராதாகிருஷ்ணன், இரவு நேரத்தில்  அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்ததால், குடும்பத்தினர் அவரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து ஆம்புலன்சை வரவழைத்தனர்.  இதைக் கண்ட ராதாகிருஷ்ணன் பக்கத்து வீட்டு  தென்னை மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்ட நிலையில் குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் அவரை மரத்திலிருந்து இறக்க முயற்சித்தும் முடியவில்லை. 

தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து ராதாகிருஷ்ணனை மரத்திலிருந்து கீழே வரவழைத்து, பின் மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments