சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் படம் அதிர்ச்சியைத் தருகிறது - உயர்நீதிமன்ற கிளை

0 2120

சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருவதாகவும், உரிய தீர்வு காணப்படவில்லை எனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்க தடை கோரியும், டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றக்கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட மாணவர்கள் மது அருந்துவது குறித்த புகைப்படங்களை பார்த்த நீபதிகள், நாடு எங்கு செல்கிறது என்று தெரியவில்லை என வேதனை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments