போதை கணவன் தொல்லையால், இரண்டு குழந்தைகளுடன் பெண் தூக்கிட்டு தற்கொலை..!

விருத்தாசலம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் இரண்டு குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட குமார் -சாகிரா பானு தம்பதியினர் ஒரு மகன், மகள் உள்ள நிலையில் மதுவுக்கு அடிமையான குமார் போதையில் அடிக்கடி மனைவியை அடித்து உதைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகின்றது.
இதனால் விரக்தி அடைந்த சாகிரா பானு, தனது மகன் மற்றும் மகளுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 3 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் குறித்து குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments