விருந்தில் பங்கேற்க அனுமதிக்காததால் நட்சத்திர விடுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து தகராறு செய்த இளைஞர்கள்..!

0 2823
விருந்தில் பங்கேற்க அனுமதிக்காததால் நட்சத்திர விடுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து தகராறு செய்த இளைஞர்கள்..!

கோவை ரேஸ்கோர்ஸில் விருந்தில் பங்கேற்க அனுமதி அளிக்காததால் நட்சத்திர விடுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து கும்பல் ஒன்று தகராறு செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

தனியார் நட்சத்திர விடுதியில் தம்பதிகள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், நேற்றிரவு சொகுசு கார்களில் வந்த ஐந்து இளைஞர்களை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து, காரில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து எவ்வளவு வேண்டும் என கேட்டு வாக்குவாதம் செய்த இளைஞர்கள் திடீரென கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வந்து பாதுகாவலர்களை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்து நட்சத்திர விடுதிக்கு விரைந்து சென்ற போலீசார், இருதரப்பிடமும் விசாரணை நடத்திய பின்னர் இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments