ஸ்ரீமதி மரணம் தொடர்பாக வதந்தி பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் விடுவிப்பு..!
ஸ்ரீமதி மரணம் தொடர்பாக வதந்தி பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணன் விடுவிப்பு..!
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை இணையத்தில் பரப்பியதாக குற்றம்சாட்டி விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை மாலையில் போலீசார் விடுவித்தனர்.
சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள இல்லத்திலிருந்து அவரை அழைத்து சென்ற கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் போலீசார், திண்டிவனம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு விடுவித்தனர்.
Comments