காவல்நிலைய வளாகத்தில் துப்பாக்கியால் சுட்ட ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ - 5 பேரை கைது செய்த போலீசார்..!

0 3574
காவல்நிலைய வளாகத்தில் துப்பாக்கியால் சுட்ட ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ - 5 பேரை கைது செய்த போலீசார்..!

மும்பையில் உள்ள தாதர் காவல்நிலைய வளாகத்தில் விசாரணைக்கு வந்த ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ சதா சர்வாங்கர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், எம்.எல்.ஏ, அவரது மகன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தாதர் பகுதியில், கடந்த இரு நாட்களுக்கு முன் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது, ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்ரே அணியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து, ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் கீழ், உத்தவ் தாக்ரே அணியைச் சேந்த 5 பேர் கைது செய்யப்பட்டு 25 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

தொடர்ந்து, உத்தவ் தாக்ரே அணியினர் அளித்த புகாரின் கீழ் கலவரத்தை தூண்டுதல் மற்றும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ மீது வழக்கு பதியப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments