பாலாற்றில் குளிக்கச்சென்ற 2 பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்பு

0 3915
பாலாற்றில் குளிக்கச்சென்ற 2 பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்பு

செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் குளிக்கச்சென்ற 2 பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

10ம் வகுப்பு படித்து வரும் சஞ்சய், 11ம் வகுப்பு படித்து வரும் மற்றொரு சஞ்சய் ஆகிய இருவரும் நேற்று மாலை வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர் சகமாணவர்களிடம் விசாரித்துள்ளனர்.

இருவரும் ஆற்றில் குளிக்க சென்றதாக அவர்கள் கூறியதை அடுத்து பாலாற்றுக்கு சென்று பார்த்தபோது ஆற்றங்கரையில் மாணவர்களின் ஆடைகள் இருந்துள்ளன.

இதையடுத்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடி இருவரது உடலையும் மீட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments