மது அருந்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட அண்ணனை, கத்தியால் குத்திய தம்பி கைது

0 3893
மது அருந்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட அண்ணனை, கத்தியால் குத்திய தம்பி கைது

காஞ்சிபுரம் அருகே, மது அருந்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட அண்ணனை, கத்தியால் குத்திய 12ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பால்பிரபுதாஸ் என்பவரது மனைவி செல்வராணி, பள்ளி தலைமை ஆசிரியயையாக உள்ளார். இவர்களது மூத்த மகன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

19 வயதான இளைய மகன், 12ம் வகுப்பும் படித்து வந்த நிலையில், அவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மது அருந்துவிட்டு வந்து தாயிடம் தகராறு செய்ததை கண்டித்ததால் ஆத்திரமடைந்த தம்பி, கத்தியை எடுத்து அண்ணனை குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த அவரை, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. வீட்டில் தடுக்கி விழுந்ததால் கத்திக்குத்துபட்டு விட்டதாக கூறியதைக் கேட்டு சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விசாரணையில், தம்பியே மதுபோதையில் அண்ணனை குத்திக் கொன்ற விவரம் தெரிய வந்தது. தாயார் நல்லாசிரியர் விருது வாங்க தயாரான நிலையில் அவருடைய இளைய மகனே குடிபோதையில் உடன் பிறந்த சகோதரனை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments