கன்னியாகுமரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை..!

0 3061
கன்னியாகுமரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை..!

கன்னியாகுமரியில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளாங்கோடு பகுதியில் வசித்து வந்த கிருஷ்ணன் குட்டி என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் கடன் பெற்று தனது மகள் நித்யாவை திருமணம் செய்து வைத்தார்.

மேலும், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் சிகிச்சைக்கு கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

குடும்ப பிரச்னை காரணமாக ஆறு மாதத்திலேயே விவாகரத்து பெற்ற நித்யா தந்தையின் வீட்டிற்கு வந்த தங்கியிருந்த நிலையில், நேற்றிரவு குளிர்பானத்தில் விஷம் கலந்து மூவரும் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments