சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
சாலை வளைவில் திரும்பிய குட்டியானை மீது அரசு பேருந்து மோதி விபத்து.. ஒருவர் பலி.!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சாலை வளைவில் திரும்பிய குட்டியானை மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அருப்புக்கோட்டையில் இருந்து விசைத்தறிக் கூடங்களுக்கு நூல் ஏற்றிக் கொண்டு குட்டியானை, டி. சுப்புலாபுரம் கிராமத்திற்கு சென்றது. வந்த வேகத்தில் வளைவில் திரும்பியபோது, எதிர்புறம் குமுளியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து, பக்கவாட்டில் மோதி இழுத்துச் சென்று நின்றது.
விபத்தில் குட்டியானையில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணித்தோர் உள்பட இருபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
Comments