உறவுக்கார பெண்ணுடன் சென்ற போது கிண்டல் செய்ததால் ஆத்திரம்.. 2 இளைஞர்களை கத்தியால் குத்திய நபர் கைது..!

0 3356
உறவுக்கார பெண்ணுடன் சென்ற போது கிண்டல் செய்ததால் ஆத்திரம்.. 2 இளைஞர்களை கத்தியால் குத்திய நபர் கைது..!

வேலூர் அருகே, உறவுக்கார பெண்ணுடன் பைக்கில் சென்ற போது கிண்டல் செய்த 2 இளைஞர்களை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

வேலப்பாடியைச் சேர்ந்த நண்பர்களான அஜித் குமாரும், தினேஷும் நேற்றிரவு 1 மணியளவில் மது அருந்திவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனங்களில் நண்பர்களுடன் வந்த வாலிபர் ஒருவர், போதையில் இருந்த இருவரையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.

தகவலறிந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பின்னர், சிசிடிவி பதிவுகளைக் கொண்டு இளைஞர்களை கத்தியால் குத்திய அஜய் என்ற இளைஞரை கைது செய்து விசாரித்ததில், தனது உறவுக்கார பெண்ணுடன் பைக்கில் செல்லும் பொழுது கிண்டல் செய்ததால் ஆத்திரத்தில் இருவரையும் தாக்கியதாக அஜய் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments