மரத்தில் இருந்த சிறுத்தை புலியை விரட்டி அடித்த தெரு நாய்கள்.. வைரலாகும் வீடியோ!

0 2713

கர்நாடகாவில், மரத்தில் இருந்த சிறுத்தை புலியை தெரு நாய்கள் விரட்டி அடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

மைசூர் ரிசர்வ் பேங்க் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் அருகே இருக்கும் மரத்தின் மீது சிறுத்தை புலி ஒன்று அமர்ந்திருந்தது.

இதனை கவனித்த 2 தெரு நாய்கள் சிறுத்தை புலியை பார்த்து சத்தமாக குரைக்க ஆரம்பித்தன. இதனால் மரத்தை விட்டு கீழே இறங்கிய சிறுத்தைப்புலி  அந்த 2 நாய்களையும் தாக்க முயற்சி செய்தது.

ஆனால் நாய்கள் இரண்டும் சிறுத்தை புலியிடம் இருந்து தப்பித்து ஓடி மீண்டும் குரைக்க ஆரம்பித்தன.இதனால்  சிறுத்தை புலி பயந்து  அங்கிருந்து தப்பிச் சென்றது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments