பிரபல ரவுடியாக வலம் வந்த நபர் துப்பாக்கி முனையில் கைது.!

0 3185

சென்னை தாம்பரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த நபர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.

இரும்புலியூரைச் சேர்ந்த விவேக் ராஜ் என்ற விவேக் மீது காவல்நிலையத்தில் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், உள்ளிட்ட பல்வேறு வழக்குள் காவல்நிலையத்தில் உள்ளன.

இந்நிலையில் கடந்த 10ந்தேதி தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் தள்ளுவண்டியில் இட்லி கடை நடத்தி வரும் நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 500ரூபாய் பறித்து சென்றுள்ளார்.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மதுரவாயில் பைபாஸ் சாலையில் இருந்த விவேக் மற்றும் கூட்டாளி விக்னேசை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

விசாரணையில், தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் உள்ள ரவுடி ஒருவரை தாம்பரம் பேருந்து நிலையத்தில் வைத்து கொலை செய்வதற்காக இருவரும் திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்தது. இதற்காக வாங்கிய 3 புதிய பட்டா கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments