தனியார் கடன் செயலிகளை உருவாக்கி அப்பாவிகளிடம் பலகோடி மோசடி.. 4பேர் கொண்ட கும்பல் கைது!

0 2725

தனியார் கடன் செயலிகளை உருவாக்கி, அதன் மூலம் பல அப்பாவிகளை மோசடி செய்து பலகோடி வரை பணம் சம்பாதித்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கால் சென்டர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது போல் இண்டர்வியூ நடத்தி, தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆபாசமாக திட்டவும் , மார்பிங் செய்வதற்கு கூட பயிற்சி அளிக்கப்படுவதும் தெரிய வந்தது.

அவர்களின் 47 வங்கி கணக்குகளை முடக்கிய போலீசார் அந்த கும்பலின் தலைவனை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments