படகுப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்ற படகு கவிழ்ந்ததில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

0 2204

கேரளாவில் படகுப்போட்டியில் பங்கேற்கச் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர்.

பத்தணந்திட்டா மாவட்டம் ஆறான்முளா பகுதியில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆலப்புழா அருகே சென்னித்தலா பகுதியிலிருந்து ஒரு படகு புறப்பட்டது.

15க்கும் மேற்பட்டோர் துடுப்பு போட்டபடி சென்ற நிலையில் அந்த படகு திடீரென நீரில் கவிழ்ந்தது.

படகிலிருந்து தண்ணீரில் விழுந்தவர்களை மீட்க அங்கிருந்தவர்கள் முயன்றனர். 4 பேரை மீட்க முடியாததை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு 2பேரை சடலமாக மீட்டனர். தொடர் மழை காரணமாக ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் படகு கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments