வாழைத் தோட்டத்தில் தீப்பற்றியதில் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான வாழைகள் எரிந்து நாசம்.!

0 1333

திருச்செந்தூர் அருகே வாழைத் தோட்டத்தில் தீப்பற்றியதில் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான வாழைகள் எரிந்து நாசமாகின.

பத்துக்கண் பாலம் அருகே உள்ள நிலத்தில் கண்ணதாசன் என்பவர் 6 ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

அப்பகுதியில் முட்செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுப்பணித்துறையினர், முட்செடிகளை அகற்றிவிட்டு தீ வைத்து அணைக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. பலத்த காற்றால், அருகில் உள்ள வாழைத் தோட்டத்துக்கும் தீ பரவியது.

இதில், 7 ஆயிரம் வாழைகள் தீயில் கருகின. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர், சுமார் 4 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments