ஒரு இன்ஸ்டா குயிலும்.. 2 இம்சை அரசர்களும்.. கிளைமாக்ஸில் கொலை..! என்ன வேணாலும் செய்வாராம்..!

0 3861

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இன்ஸ்டாகிராமில் அறிமுகமான காதலிக்கான போட்டியில்  ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. கணவனை பிரிந்த இன்ஸ்டாகுயிலுக்காக , நண்பரை கொலை செய்த வழக்கில் சிக்கி சிறை பறைவயான ஆட்டோ காதலன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

நான் கட்டிக்க போறவன் எனக்காக என்ன வேணும்னாலும் செய்வான் என்று வாய்கிழிய கூவும் இவர் தான் இன்ஸ்டா குயில் பூமிகா..!

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தட்டாஞ்சாவடி களத்து மேடு பகுதியை சேர்ந்த பூமிகாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் பூமிகா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மூழ்கி வித விதமாக ரீல்ஸ் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார்.

இதனை அவரது கணவர் கண்டித்த நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை பிரிந்து பூமிகா வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பூமிகா பண்ருட்டியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்த நிலையில் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டும் சுமன் என்பவர் இவருக்கு பழக்கமாகியுள்ளார்.

ஆட்டோ ஓட்டுனர் சுமன் பூமிகாவை காதலிப்பதாக கூறி ஒன்றாக சுற்றி வந்த நிலையில் சுமனின் நண்பரான சக்திவேலுவுக்கும் பூமிகாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் நண்பர்கள் இருவரையும் பூமிகா காதல்வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகின்றது

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சக்திவேலுவுடன் மட்டும் பூமிகா சுற்றி வந்ததால் சுமனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனை பலமுறை சுமன் கண்டித்த நிலையிலும் இருவரும் அது குறித்து கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுமன் சம்பவத்தன்று இரவு சக்திவேலை சமாதானம் பேச அழைத்துள்ளார். காதலியை விட்டு விலகிவிடுமாறு கூறி உள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் மற்ற கூட்டாளிகளுடன் சேர்ந்து சக்திவேலை சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு சுமன் தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு வந்த புதுப்பேட்டை போலீசார் சக்திவேலின் சடலத்தை கைப்பற்றி பிணகூறாய்வுக்கு அனுப்ப முயன்ற போது , சடலத்தை எடுக்கவிடாமல் தடுத்த உறவினர்கள், சக்திவேலை கொலை செய்த சுமன் உள்ளிட்டோரை கைது செய்யக்கோரி தட்டஞ்சாவடி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சுமன், கூட்டாளி வசந்தகுமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கணவனை கைவிட்ட இன்ஸ்டாகுயிலுக்காக ஏற்பட்ட போட்டியில் கொலை வழக்கில் சிக்கி இம்சை காதலன் சுமன் சிறைப்பறவையாகி கம்பி எண்ணி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments