இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு இரங்கல்

0 1442
இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு இரங்கல்

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அரசின் செய்திக்குறிப்பில், பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் டிரஸ்க்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, வர்த்தகத்துறை மற்றும் வெளியுறவுச் செயலாளராக பதவி வகித்தபோது அவர் அளித்த பங்களிப்பை பாராட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்தும், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்தும் இருநாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடியாக அரசு தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments