ஜார்க்கண்டில் கிராம மக்களே ஒன்று சேர்ந்து இரண்டு நாட்களில் கட்டிய பாலம்..!

0 1528

ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் கிராம மக்களே ஒன்று சேர்ந்து இரண்டு நாட்களிலேயே
மரப்பாலத்தை அமைத்து பாதையை உருவாக்கியுள்ளனர்.

போகசடம் கிராமத்தில் வசிக்கும் 200 பேர் தன்னார்வத்துடன் செயல்பட்டு 200 அடி நீளத்துக்கான பாலத்தை கட்டியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய கிராம மக்கள், மழைக்காலங்களில் தங்களது கிராமம் தீவு போல் மாறிவிடும் என்றும் இங்கு வசிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும், விவசாயிகள் வயலுக்கு போகவும், கால்நடை மேயக்கவும் சிரமப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த பாலத்தை கட்டி முடிக்க 5 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆனதாகவும் கிராம மக்கள் குறிப்பிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments