நாடு 4 வது தொழிற்புரட்சியை நோக்கி முன்னேறிவருவதாக பிரதமர் மோடி புகழாரம்

0 1688

நாடு நான்காவது தொழிற்புரட்சியை நோக்கி முன்னேறிவருவதாக, பிரதமர் நரேந்திமோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் மத்திய-மாநில அரசுகள் பங்கேற்கும் இரண்டு நாள் அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 2015 ல் 81வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 46வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என குறிப்பிட்டார்.

இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்திற்கு விரைவாக மாறி வருகின்றனர் என்றும் நாம் முழு பலத்துடன் அவர்களை ஆதரிக்க வேண்டும் என்றும் பிரதமர் அப்போது கேட்டுக்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments