ரியல் எஸ்டேட் அதிபர் காரின் கதவை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை - 3 பேர் கைது!

0 2144

நாமக்கல் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் காரில் இருந்து 20 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சுல்தான்பேட்டை சேர்ந்த பாலசுப்ரமணி என்பவர் கடந்த மாதம் 17-ந்தேதி 20 லட்சம் ரூபாயை காரில் வைத்து விட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த பணத்தை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 3 பேர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், சென்னையில் பதுங்கி இருந்த சுனில்குமார், சர்க்கா ரியா, ஆந்திராவைச் சேர்ந்த அஜித் ஆகிய 3 பேரை கைது செய்து 13 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments