தலைவர் பதவி குறித்து தெளிவாக முடிவெடுத்து விட்டேன், குழப்பம் ஏதும் இல்லை - ராகுல் காந்தி

0 2392

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன் என கூறிவிட்டு நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொள்வது முரண்பாடாக உள்ளதே என்ற கேள்விக்கு, தாம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக பாத யாத்திரையை மேற்கொள்வதால் முரண்பாடு எதுவும் இல்லை என ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

கன்னியாகுமரியில் 3ஆம் நாள் பாதயாத்திரையை இன்று ஸ்காட் கல்லூரியில் இருந்து தக்கலை நோக்கி ராகுல் காந்தி மேற்கொண்டார்.

இடையில், புலியூர்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், காங்கிரஸ் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சிக்கு எதிராக இருப்பதாக தெரிகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, தன்னை விட அவர்கள் மீது பாஜக அதிக அழுத்தம் போடுவதாக தாம் நினைப்பதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments