பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத் மறைவு: நாடு முழுவதும் வரும் 11ஆம் தேதி துக்கம் அனுசரிக்கப்படும் - மத்திய அரசு

0 1942

பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத் மறைவை ஒட்டி இந்தியா முழுவதும் வரும் 11ஆம் தேதி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டு காலம் பதவி வகித்த அவர், உடல்குறைவு மற்றும் வயது முதிர்ச்சியால் உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, வரும் ஞாயிற்றுக்கிழமையன்று தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments