போக்குவரத்து நெரிசலின்போது வழிவிட மறுத்ததாகக் கூறி தனியார் நிறுவன ஊழியருக்கும் வழக்கறிஞருக்கும் இடையே கைகலப்பு!

0 2149

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே போக்குவரத்து நெரிசலின்போது வழிவிட மறுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியருக்கும், வழக்கறிஞருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

மாதவரம் 200 அடி சாலையில் போக்குவரத்து நெரிசலில் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த தனியார் நிறுவன ஊழியர் மனோஜ் குமாரின் பின்னால் இருந்த வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், தனது இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து ஹாரன் அடித்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனோஜுக்கும், கிருஷ்ண குமாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் தங்களது நண்பர்களை வரவழைத்து கும்பலாக தாக்கி கொண்டனர். இதை தடுக்க வந்த வாகன ஓட்டிகள் சிலரையும் இருதரப்பும் தாக்கியுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், இருதரப்பும் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments