எலிசபெத் ராணி பார்க்காத உலக சரித்திரம் இல்லை - கமல்ஹாசன் புகழாரம்

0 3153

இங்கிலாந்து ராணி எலிசபெத் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

உலகம் அரசியல் மாறிவிட்டது என்பதை உணர்ந்த உலகத்தில் ஒருவராகவும், அந்த காலணி மனப்பான்மையில் இருந்து மாறிவிட்டோம் என்று இங்கிலாந்து நாட்டின் பிரதிநிதியாகவும் இந்தியாவிற்கு எலிசபெத் ராணி வந்திருந்தார்.

மருதநாயகம் படப்பிடிப்பில், நாங்கள் பேசிய வசனங்கள் அனைத்தும், காலணி ஆட்சிக்கு எதிராகதான் பேசுவோம் என்று தெரிந்தும் அங்கு வந்து உட்கார்ந்து இருந்தார். அது அவரின் மனப்பாங்கையும், அரசியல், உலகம் மாறிவிட்டது என்பதை உணர்ந்த
அரசியாக வராமல், ஒரு தாயாக வந்திருந்தார். அது எனக்கு பிடித்திருந்தது. எலிசபெத் ராணியை நானும் சந்தித்து பேசியிருக்கிறேன் என கமல்ஹாசன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments