தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

0 1965

ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் வட தமிழக மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.

மேலும் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments