அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!

0 1851

காரின் முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுங்காடு கீழாநூர் பகுதியைச் சேர்ந்த அபிஜித் என்பவர் தனது மனைவி, 2 வயது பெண் குழந்தை மற்றும் உறவினர்கள் 10 பேருடன் பழனிக்கு காரில் வந்துக்கொண்டிருந்தார்.

பண்ணைப்பட்டி அருகே வந்தபோது அவர்களது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால், தடுப்பு சுவர் மீது மோதி, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் அதேஇடத்தில் பலியானார்கள். அபிஜித்தின் 2 வயது பெண் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments