காமன்வெல்த் அமைப்பு மக்களை ஒருங்கிணைத்து சகாப்தம் படைத்தவர் இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் - அதிபர் பைடன் புகழாரம்!

0 1724

காமன்வெல்த் அமைப்பு நாடுகளின் மக்களை ஒருங்கிணைத்து சகாப்தம் படைத்தவர் மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புகழாரம் சூட்டியுள்ளார்.

ராணி எலிசபெத் மறைவையடுத்து, வாசிங்டனில் உள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு தனது மனைவி ஜில் பிடனுடன் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் இரங்கல் குறிப்பை பதிவு செய்தார்.

இரண்டாம் எலிசபெத் சிறந்த பெண்மணி என்றும், அவரது மறைவுக்காக அமெரிக்க மக்கள் அனைவரும் துக்கம் அனுசரிப்பார்கள் என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகை, அமெரிக்க ராணுவ நிலைகள், கடற்படை நிலையங்கள், கப்பல்கள், தூதரகங்கள், அரசு அலுவலகங்களில் அமெரிக்க தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments