ஜீரோ கிராவிட்டி போட்டோகிராபி நிறுவனத்தில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தீவிர சோதனை.!

0 2897

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜீரோ கிராவிட்டி போட்டோகிராபி நிறுவனத்தில் சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் இரவு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

இந்த நிறுவனம்  சார்பில் கொள்முதல் செய்யப்பட்ட கேமரா மற்றும் உதிரிபாகங்கள் வாங்கியது தொடர்பாக முறைகேடு நடந்ததாக கூறி வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது.

சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் இரவு முழுவதும் சோதனை தொடர்ந்து நடைபெற்றது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மதிப்பு மற்றும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து சோதனை நிறைவு பெற்ற பின்னரே தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments