பெற்றோர் எதிர்ப்பை மீறி ராஜ்கிரணின் மகள் காதல் திருமணம்..! வளர்ப்பு மகள் உறவை முறித்தார்.!
நடிகர் ராஜ்கிரனின் மகள் , பெற்றோர் எதிர்ப்பை மீறி தொலைக்காட்சி நடிகரை காதலித்து மணந்ததாக தகவல் வெளியான நிலையில், அவர் வளர்ப்பு மகள் என்றும் இனி அந்த பெண்ணுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றும் ராஜ்கிரண் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்
தமிழ் திரை உலகில் தனித்திறமை வாய்ந்த நடிகராக விளங்குபவர் ராஜ்கிரண். நாயகனாக அறிமுகமாகி தற்போது நாயகர் மற்றும் நாயகர்களின் தந்தையாக கெத்தான வேடங்களில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரணின் மகள் ப்ரியா என்பவர் தொலைக்காட்சி சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து பெற்றோர்எதிர்ப்பை மீறி ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார். புது மண தம்பதியினரை ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி மிரட்டுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தனர்
இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரன் இந்த சம்பவம் குறித்து தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் தனக்கு திப்பு சுல்தான் என்கிற நைனார் முகமது என்ற ஒரு மகனை தவிர வேறு பிள்ளைகள் கிடையாது.
இந்து மதத்தை சேர்ந்த வளர்ப்பு மகள் இருந்தார் அவரது பெயர் பிரியா,அவரை வளர்ப்பு மகள் என்று நான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சொந்தமகள் என்றே சொல்லி வந்தேன், முக நூல் மூலம் நட்பு ஏற்படுத்திக் கொண்ட சீரியல் நடிகர் , என்னென்ன முறையிலோ அந்தப்பெண்ணை தன் வசப்படுத்தி கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மன நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்.
இந்த விஷயம் தனது காதுக்கு வந்ததும், அந்த நடிகரை பற்றி விசாரிக்க ஆரம்பித்ததில் அவர் மகா மட்டரகமான புத்தியும், பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என்பது எனக்கு தெரியவந்தது.
அவரது நோக்கம் பெண்ணை வைத்து வாழ்வதில்லை, எனக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்புகள் பெறுவதும், என்னிடம் இருந்து பணம் பறிப்பது மட்டுமே அவரது குறிக்கோள், இதையெல்லாம் விசாரித்து தெரிந்து கொண்டு எனது வளர்ப்பு மகளிடம் சொன்னேன், அவர் காதில் நான் சொன்னது ஏதும் ஏறவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார் ராஜ்கிரன்
அப்பாவின் மனதை வேதனைப்படுத்தி இந்த கல்யாணம் வேண்டாம் என்று என் மனைவி அந்த பெண்ணிடம் அழுது மன்றாடி எப்படியெல்லாமோ மடிப்பிச்சை கேட்டதால், ஒரு வழியாக சரி இவர் வேண்டாம் உங்கள் விருப்பப்படி நல்ல மாப்பிள்ளை பாருங்கள் என்று சொல்ல நாங்களும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தோம்.
இந்த சூழ் நிலையில் மனைவியின் தோழியான லட்சுமி பார்வதியை பார்த்துவிட்டு வருவதாக கூறிச்சென்று 4 மாதங்களாகி விட்டது இன்னும் எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை, இந்த நிலையில் என் மனைவிதான் இதெற்கெல்லாம் காரணாம் என்பது போல பேசிக் கொண்டு திரிகிறது இந்த பெண்.இன்று வரை அந்த பெண்ணுக்காக உறுதுணையாக இருப்பது என் மனைவி மட்டும் தான் என்று கூறி உள்ள ராஜ்கிரன்
பெண் பிள்ளையை வளர்க்கும், ஒவ்வொரு தாயும், தன் பிள்ளையை நல்லபடியாக வாழ வைக்க வேண்டுமே என்ற அக்கறையில் எப்படியெல்லாம் கண்காணிப்பாளோ அப்படி ஒரு தாய் நடந்து கொள்வது, வாழ்க்கை அனுபவமில்லாத சிறு பிள்ளைகளுக்கு தவறாக தோன்றுகின்றது... என்று வேதனை தெரிவித்துள்ளார்
என் வளர்ப்பு பெண் ஒரு தரமான ,மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால் , சாதி பேதம் பார்க்காத நான் சந்தோசமாக கட்டிக்கொடுத்திருப்பேன், ஆனால் தரங்கெட்ட பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து தன் வாழக்கையை நாசமாக்கி கொண்டாளே என்பது மட்டுமே வருத்தம் என்று கூறி உள்ளார்.
அந்த சீரியல் நடிகர் குள்ள நரித்தனத்தால் என் வளர்ப்பு பெண்ணிற்கு கணவானாகிகொள்ளட்டும், ஆனால் எந்த காலத்திலும், எனக்கு மருமகனாக முடியாது இன்றிலிருந்து இவர்கள் , இருவருக்கும் என் குடும்பத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை நேர்மையும் சத்தியமுமே என்றும் வெல்லும் என்று ராஜ்கிரன் தெரிவித்துள்ளார்
Comments