ராணி எலிசபெத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

0 2103

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஆழ்ந்த வேதனையை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஏழு தசாப்தங்கள் நீடித்த ஆட்சி, 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கிய திருப்புமுனைகளுக்குப் பிறகு, இரண்டாவது எலிசபெத்தின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், தன்னுடைய கண்ணியம், பொது வாழ்க்கையில் நேர்மை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நீண்ட காலமாக எலிசபெத் நினைவுகூரப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments