உடல்நலக்குறைவு காரணமாக இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானார்.!

0 6540

ராணி எலிசபெத் காலமானார்


இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானார்


உடல்நலக்குறைவு காரணமாக ராணி எலிசபெத்தின் உயிர் பிரிந்தது

1953 முதல் ராணி எலிசபெத் பதவியில் நீடித்து வந்தார்

மறைந்த ராணிக்கு வயது 96

இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து மன்னராகப் பொறுப்பேற்க உள்ளார்

 


இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96

உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் ராணி எலிசபெத்தின் உயிர் பிரிந்தது

ராணியின் மறைவை அடுத்து இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து மன்னராகப் பொறுப்பேற்க உள்ளார்

1953ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகளாக ராணி எலிசபெத் பதவியில் நீடித்து வந்தார்


மன்னர் 6-ம் ஜார்ஜ் மறைவுக்குப் பின் 1953ம் ஆண்டு பதவிக்கு வந்தவர் ராணி எலிசபெத்

ராணி எலிசபெத் உலகில் நீண்டகாலம் ஆட்சி செய்து சாதனை படைத்தவர்

ராணி எலிசபெத் காலமான செய்தியை அறிவித்தது பக்கிங்ஹாம் அரண்மனை

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இருந்து 15 பிரதமர்கள் காலத்தில் அரசியாக பொறுப்பு வகித்தவர்

அரச குடும்பத்தினர் அனைவரும் பால்மோரல் அரண்மனையில் திரண்டுள்ளனர்

ராணியின் மறைவை அடுத்து 73 வயதான இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து மன்னராகப் பொறுப்பேற்க உள்ளார்

ராணி எலிசபெத் மறைவுக்கு மோடி இரங்கல்

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

2015 முதல் 2018ம் ஆண்டு வரை இங்கிலாந்து சென்றபோது ராணி எலிசபெத்தை நினைவுகூர்ந்துள்ளார் பிரதமர் மோடி

தமது திருமணத்திற்கு மகாத்மா காந்தி பரிசளித்த கைக்குட்டையைக் காண்பித்து மகிழ்ந்தார் எலிசபெத்- மோடி ட்வீட்

ராணி எலிசபெத்தின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

16 நாடுகளின் தலைவியாக இருந்தவர் எலிசபெத்

பிரிட்டன் ராணி எலிசபெத் 16 நாடுகளின் அரசியல் சாசனப்படி அரசியாக இருந்தார்

54 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராக இருந்தார் எலிசபெத்

பிரிட்டன் பிரதமர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் ராணி எலிசபெத்

உடலை நாளை லண்டனுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு

ராணி எலிசபெத்தின் உடலை நாளை பக்கிங்காம் அரண்மனைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பால்மோரல் அரண்மனையில் ராணியின் பேரன்கள் வில்லியம், ஹாரி உள்ளிட்டோர் உள்ளனர்

பக்கிங்காம் அரண்மனை சார்பில் அறிக்கை

ராணி எலிசபெத் மறைவு குறித்து பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது

தாமும் தமது குடும்பத்தினரும் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்ந்திருப்பதாக சார்லஸ் அறிக்கை

இங்கிலாந்து, காமன்வெல்த் நாடுகள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள மக்களுக்கு அவரது மறைவு பேரிழப்பு

ராணி எலிசபெத் மறைவு குறித்து பிரதமர் லிஸ் டிரஸ் உரை

பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவு குறித்து பிரதமர் லிஸ் டிரஸ் உரை நிகழ்த்தி வருகிறார்

70 ஆண்டு காலப் பதவிக் காலத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர் ராணி எலிசபெத்- லிஸ் டிரஸ்

பல லட்சம் மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர் ராணி எலிசபெத்- லிஸ் டிரஸ் உரை

பலருக்கு முன்னுதாரணமாக விளங்கிய தலைவராக ராணி எலிசபெத் விளங்கினார்- பிரதமர் லிஸ் டிரஸ்

மன்னரானார் சார்லஸ்

பிரிட்டன் மன்னர் சார்லஸ் என பிரதமர் லிஸ் டிரஸ் உரையில் குறிப்பிட்டார்

மன்னர் சார்லஸ் பிரிட்டனை ஒருங்கிணைத்து அழைத்துச் செல்வார் என லிஸ் டிரஸ் நம்பிக்கை

வெள்ளை மாளிகை இரங்கல்

ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிக்கை

பிரிட்டன் அரச குடும்பத்தினருக்கும் பிரிட்டன் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்- வெள்ளை மாளிகை

உலகத் தலைவர்கள் இரங்கல்

ராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

ராணி எலிசபெத் முத்திரை பதித்தவர்- போலந்து பிரதமர்

தன்னலமற்ற தலைவராக விளங்கினார் எலிசபெத்- நேட்டோ தலைவர்

ராணி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்- இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே

பிரிட்டனின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் பாடுபட்டவர் எலிசபெத்- டிரம்ப் இரங்கல்

ராணியின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ஒளிகாட்டும் விளக்காக விளங்கினார் எலிசபெத்- ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்

இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு நல்லிணக்கத்தின் சின்னமாக விளங்கினார்- ஜெர்மனி அதிபர்

அரைக்கம்பத்தில் பிரிட்டன் தேசியக் கொடி

ராணி மறைவு காரணமாக பக்கிங்காம் அரண்மனையில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ராணி எலிசபெத் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது- மு.க.ஸ்டாலின்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments