மூன்று இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்து-இருவர் பலி.. இருவர் படுகாயம்..!

0 2355

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மூன்று இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் பலியான நிலையில், இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

மேட்டுப்பட்டி பகுதியில், பூசாரி கவுண்டன் வலசை பகுதியை சேர்ந்த பிரவின், தனது உறவினரான பெண் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, எதிரே தவறான பாதையில் வேகமாக வந்த ஜெகன் என்பவர், பிரவின் வந்த வாகனத்தின் மீது மோதினார்.

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் மற்றொரு இருசக்கரவாகனத்தில் வந்த செந்தில் என்பவர் மீது மோதினர். இதில், பிரவினும், அவருடன் வந்த பெண்ணும் நிகழ்விடத்தில்யே உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments