2-வது நாளாக ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம்..! தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

0 4256

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் 2-வது நாளை கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் தொடங்கி நாகர்கோவிலில் நிறைவு செய்தார். கொட்டாரத்தில், அவருக்கு ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய தமிழ் நடனங்களுடன் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மதியம் சுசீந்திரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி, தோல்வியை கண்டு பயப்படக்கூடாது. தோல்வியை எதிர்த்து போராடினால் தான் வெற்றி பெற முடியும். எனவே தோல்வியை எதிர்கொள்ள பக்குவப்பட வேண்டும். அப்படி இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இரண்டாவது நாள் நடைபயணத்தை நாகர்கோவிலில் நிறைவு செய்த ராகுல் காந்தி இரவு ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments