பிரிட்டன் ராணி 2-ஆம் எலிசபெத் உடல் நிலை கவலைக்கிடம்.!

0 2224

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

96 வயதான அவர் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரது குடும்பத்திற்கும் இது பற்றி மருத்துவர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள அவரது அரச இல்லமான பால்மோரலில் இருப்பதால் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோர் அங்கு சென்றிருப்பதாகவும், மற்ற குடும்ப உறுப்பினர்களும் அங்கு விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments