புகையிலை சாப்பிட்ட இளைஞரை வாளால் வெட்டிக் கொன்ற சீக்கியர்கள்.!

0 2314

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் இளைஞர் ஒருவரை 3 சீக்கியர்கள் வாளால் வெட்டிக் கொன்ற பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பொற்கோயில் அருகேவுள்ள தெரு பகுதியில் 20 வயதான ஹர்மந்த்ஜீத் சிங் என்பவர், மோட்டார் சைக்கிளில் அமர்ந்தபடி புகையிலை பொருளை வாயில் போட்டு சுவைத்தபடி இருந்தார்.

இதேபோல் மதுபோதையில் அவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அங்குவந்த நிகாங் என்னும் பழமைவாத சீக்கிய பிரிவை சேர்ந்த 3 பேர் தட்டிக்கேட்டபோது கைகலப்பு ஏற்பட்டு, கொலையில் முடிந்தது.

கொலை நடந்தபோது சுமார் ஆறேழு பேர் இருந்தும் யாரும் தடுக்கவில்லை. கொலை சம்பவத்துக்கு பிறகு, சடலமும் அங்கேயே நீண்ட நேரம் கிடந்தது. சிசிடிவி காட்சியை வைத்து ஒருவரை கைது செய்த போலீஸ், எஞ்சிய 2 பேரை தேடி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments