சென்னையில் 104 இடங்கள் BLACK SPOT..!

0 3201

சென்னையில் கொலை சம்பவங்களும், விபத்து மரணங்களும் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் குறைந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரத்தின் படி நாட்டில் உள்ள 55 மெட்ரோ நகரங்களில் சென்னையில் தான் அதிக வாகன விபத்துகள் நடப்பதாக தெரியவந்தது. இது குறித்த கேள்விக்கு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னையில் தொடர்ந்து வாகன விபத்துகள் நடக்கும் 104 இடங்கள் பிளாக் ஸ்பாட் என கண்டறியப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் ஆய்வு செய்து தீர்வு காண சிறப்பு குழு ஒன்றை அமைத்திருப்பதாக தெரிவித்தார்.

அந்த குழுவில் ஐஐடி வல்லுநர்கள், நெடுஞ்சாலை துறை, மாநகராட்சி பொறியாளர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளதாகவும் அவர்கள் கொடுக்கும் ஆய்வறிக்கையின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். அதேவேளையில் கடந்த ஆண்டை விட வாகன விபத்துகளில் ஏற்படும் மரணம் 20 சதவீதம் குறைந்துள்ளதாகவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் ரவுடி கொலை சம்பவங்கள் குறித்த கேள்விக்கு, கொலை நடக்காதே நகரங்களே உலகிலும் இல்லை, இந்தியாவிலும் இல்லை எனவும், சென்னையில் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் கொலைக் குற்றங்கள் குறைந்திருப்பதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments