கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள், துரோகம் இழைத்தவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர் -இபிஎஸ்

அதிமுகவில் எப்போதும் பிளவு கிடையாது, கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள், துரோகம் இழைத்தவர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்துக்கு சென்ற அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து வேலை செய்தவர் பன்னீர்செல்வம் என்றும், பச்சோந்தியை விட அதிக நிறம் மாறுபவர் என்றும் குற்றம்சாட்டினார்.
Comments