கும்பகோணம் செளந்தர்ராஜன் கோவிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் லண்டன் மற்றும் அமெரிக்கா அருங்காட்சியகங்களில் இருப்பது கண்டுப்பிடிப்பு!

0 2334

தஞ்சை கும்பகோணம் சௌந்தர்ராஜன் பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 4 சிலைகள் வெளிநாடுகளில் இருப்பதை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இக்கோவிலில் இருந்து 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த 4 சிலைகள் திருடப்பட்டிருப்பதாக வந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டதில், கோயிலில் இருந்த திருமங்கையாழ்வார் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பதும், காளிங்கநார்த்தன் கிருஷ்ணன், விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலை அமெரிக்கா அருங்காட்சியகங்களில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றை உள்துறை அமைச்சகம் மூலம் இந்தியாவுக்கு கொண்டுவரும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments