18 வயது நிரம்பாத மகனுக்கு பைக் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக தந்தை கைது!

0 4247

சென்னையில், 18 வயது நிரம்பாத  மகனுக்கு  இருசச்கர வாகனத்தை ஓட்ட  கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெரம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர் தீபக் பாலாஜி, தனது நண்பன் லோகேஷுடன் கடந்த மாதம் 26 ஆம் தேதி இருசக்கர  வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கினர்.

இதில் பைக்கை ஓட்டிய தீபக் பாலாஜி காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால், பின்னால் அமர்ந்து சென்ற லோகேஷ் படுகாயமடைந்து மூளை சாவு அடைந்தார். பெற்றோரின் சம்மதத்துடன் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக பைக்கை ஓட்டியதே விபத்து ஏற்பட காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், 18 வயது நிரம்பாத  மகனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட கொடுத்த குற்றத்திற்காக தீபக் பாலாஜியின் தந்தை சுப்பிரமணியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments