வி.சி.க பிரமுகரின் தங்கும் விடுதியில் காதல் ஜோடி மர்ம மரணம்..!

0 4659
சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் தங்கும் விடுதியில் காதலியை தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் தனியார் தங்கும் விடுதியில் காதலியை தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் ஒயிட் ஹவுஸ் எனும் தனியார் தங்கும் விடுதி இயங்கி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரான செல்லத்துரைக்கு சொந்தமான இந்த விடுதியில் கடந்த 3-ம் தேதி இரவு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம் ஜோடி அறை எடுத்து தங்கியுள்ளனர்.

கடந்த 2 நாட்களாக அறை திறக்கப்படாமல் இருந்த நிலையில், அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஊழியர்கள் கொடுத்த தகவலின் படி, திருவல்லிக்கேணி போலீசார் நேரில் வந்து, உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர். படுக்கை மீது காதல் ஜோடி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர்.

விசாரணையில் மேற்கு வங்க மாநிலம் பங்குரா பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடிகளான பிரச்சந்த்ஜித் கோஷ், அர்பிதா பால் என்றும் இருவரும் கணவன் மனைவி என கூறி விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

அழுகிய நிலையில் இருந்த அந்த பெண்ணின் முகத்தில் தலையணை வைத்து அழுத்தியதற்கான தடயம் காணப்பட்டுள்ளது. அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு சடலத்துடன்ஓரிரு நாட்கள் இருந்த அந்த இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், சந்தேக மரணம் என்றும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் காதலியை கொலை செய்துவிட்டு அந்த இளைஞர் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணம் என்ன.? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments