கன்னியாகுமரியில் ஒற்றுமை இந்தியா நடைபயணத்தை துவங்கினார் ராகுல் காந்தி..

0 2394

ன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான, ஒற்றுமை இந்தியா நடைபயணத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். கன்னியாகுமரி வந்த அவர், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் ஆகிய இடங்களை பார்வையிட்டார்.

பின்னர், காமராஜர் நினைவு மண்டபம் சென்ற அவர், காந்தி மண்டபம் முன் யாத்திரையை தொடங்கினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்த நிலையில், சுமார் 600 மீட்டர் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

வரும் 10-ம் தேதி வரை கன்னியாகுமரியில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர், வரும் 11-ம் தேதி திருவனந்தபுரம் செல்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments