வறுமையில் வாடும் கக்கனின் மகன்... சிகிச்சைக்கு அரசு உதவுமாறு கோரிக்கை....

0 8769
மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் வறுமையில் வாடும், மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் 2 வது மகன் பாக்கியநாதன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் வறுமையில் வாடும், மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் 2 வது  மகன் பாக்கியநாதன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக அரசியலில் எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின் 2 வது மகன் பாக்கியநாதன் மிகவும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எந்தவிதமான வருமானமும் இல்லாமல் அவதிப்பட்ட அவர்களுக்கு 2007 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதிலிருந்து வரும் வங்கி வட்டித்தொகையான 1500 ரூபாய் மட்டுமே இவர்களது தற்போதைய வருமானம் என்று கூறப்படுகிறது.

பாக்கியநாதனும், அவரது மனைவியும் 70 வயதை கடந்துவிட்ட நிலையில், பாக்கியநாதனுக்கு தற்போது உடல் நிலை மோசமடைந்துள்ளது. ஏற்கனவே, சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு போன்ற உபாதைகளால் அவதிப்பட்டு வரும் அவருக்கு இருதய கோளாறும் சேர்ந்துள்ளது.

ஆஞ்சியோ சிகிச்சைக்காக 4 ஆயிரம் ரூபாய் செலுத்தமுடியாத நிலையிலும், முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டை பெற முடியாத நிலையிலும் அவர் அவதிப்பட்டு வருகிறார். வறுமையில் வாடும் தங்களது குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என்று பாக்கியநாதனின் மனைவி சரோஜினிதேவி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கக்கன் மகனின் இந்த பரிதாப நிலை குறித்து செய்தி வெளியிடப்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் தேரணி ராஜன், பாக்கியநாதனுக்கு செலவில்லாமல் ஆன்ஜியோ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.

சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன கக்கனின் குடும்பம் தற்போது பரிதாபமான நிலையில் தவித்து வருவது காண்போரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, கக்கன் மகன் பாக்கியநாதன் உடல்நிலை குறித்து பேசிய ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் தேரணி ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, அவருக்கு சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சையளிக்கப்படுவதாகவும், அனைத்து துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments