வீட்டுக்குள் பள்ளி தலைமை ஆசிரியை ரத்த வெள்ளத்தில் கொலை.. சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்கை எடுத்து சென்ற மர்ம நபர்கள்..!

0 3405
வீட்டுக்குள் பள்ளி தலைமை ஆசிரியை ரத்த வெள்ளத்தில் கொலை.. சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்கை எடுத்து சென்ற மர்ம நபர்கள்..!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வீட்டுக்குள் பள்ளி தலைமை ஆசிரியை கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

52 வயதான ரஞ்சிதம், கணவர் இறந்து விட்டதாலும், மகன், மகள் ஆகியோர் வெளியூரில் இருப்பதாலும் வீட்டில் தனியே வசித்து வந்தார். அவர் பணிபுரியும் தெம்மாபட்டு உயர்நிலைப் பள்ளிக்கு இன்று வராததால், தொலைபேசிக்கு சக ஆசிரியைகள் தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆனால் அழைப்பை எடுக்காததால், அவருடைய வீட்டுக்கு வந்து பார்த்துள்ளனர். வீட்டின் முன்பக்க கதவு பூட்டியிருந்ததோடு, பின்பக்க கதவு திறக்கப்பட்டு, உள்ளே ரத்த வெள்ளத்தில் ரஞ்சிதம் குப்புற கிடந்துள்ளார். சம்பவ இடம் வந்து எஸ்பி செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கழுத்தில் அணிந்திருந்த நகைகள், சிசிடிவி கேமரா ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை காணவில்லை. கொலை செய்தவர்கள் அவற்றை எடுத்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments